ஐஸ் கட்டி சவால்!

நண்பர்களுடன் இணைந்திருக்கும்போது வெட்டிப்பேச்சுக்களில் ஈடுபடாமல்; அல்லது குழந்தைகளுடன் நேரத்தை செலவிடும் போது இது போன்ற அறிவியல் சவால்களை விளையாட்டாக விளையாடினோமானால் அறிவியல் அறிவும்,ஆர்வமும் பெருகும் மேலும் நேரத்தை பயனுள்ள வழியில் செலவழித்த நன்மையும் கிட்டும்.



இதோ அந்த அறிவியல் சவால் !



கிளாசில் உள்ள குளிபானம் அல்லது தண்ணீரில் மிதக்கும் ஐஸ் கட்டியை ஒரு நூலை கொண்டு வெளியில் எடுக்க முடியுமா ?

நண்பர்களையோ, குழந்தைகளையோ முயற்சி செய்து பார்க்கச்சொல்லுங்கள் !



இந்த டெக்னிக் தெரிந்தால் ஒழிய அவர்களால் முடியாது !?

உங்களால் முடியும், எப்படி ?


நூலை ஐஸ் கட்டியின் மேல் போடுங்கள், அதன் மேல் டேபிள் சால்ட் எனப்படும் தூள் உப்பை சிறிதளவு தூவுங்கள், இப்பொழுது நூலை பிடித்து தூக்குங்கள், ஐஸ் கட்டி நூலோடு சேர்ந்து வரும் !


Popular posts from this blog

சங்கிலி கருப்பன் Rattle snake