250 மில்லியன் வருடத்திற்கு முந்தைய பாக்டீரியா !

250 மில்லியன் வருடத்திற்கு முந்தைய பாக்டீரியா உயிருடன் கண்டுபிடிப்பு !

அமெரிக்காவின் தென்கிழக்கு நியூ மெக்ஸிக்கோவில் , ஒரு குகையில்  கிட்டத்தட்ட 609 மீட்டர் (2,000 அடி) ஆழத்தில்  கீழே புதைந்து இருந்த  உப்பு படிககங்கலில் இருந்ததை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இந்நுண்ணுயிரிகள் ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்ட பழங்கால உயிரினமாக கருதப்பட்ட டயனோசர்கள் போன்றவற்றை பத்து மடங்கு பழமை வாய்ந்ததாக கருதப்படுவது உயிரின ஆராய்ச்சியாளர்களிடையே மீண்டும் ஒரு சர்ச்சையை கிளப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கு முன் மிகவும் பழமைவாய்ந்த பாக்டீரியாவாக கருதப்பட்டது சுமார் 25- 40 மில்லியன் வருடங்கள் பழமைவாய்ந்த, தேன் மெழுகில் பாதுகாக்கப்பட்ட  ஒரு தேனீ யில்  இருந்த பாக்டீரியாவாகும்.

பாக்டீரியாக்கள் எப்படிப்பட்ட கடின சூழ்நிலைகளையும் தாங்கக் கூடிய ஸ்போர்ஸ்(spores) எனும் கட்டமைப்பை பெற்றிருக்கின்றன. எனவே அவை சலனமின்றி நீண்ட காலம் வாழும் தன்மை பெற்றிருக்கின்றன.

பூமிக்குள் கண்டெடுக்கப்பட்ட படிகம்


உலகின் முதன் முறையாக அணுக்கழிவுகளை பூமியின் ஆழப்பகுதிக்குள் போடும் திட்டமான Waste Isolation Pilot Plant (WIPP) க்காக ஆழ்துளையிலிருந்த எடுத்த கிரிஸ்டலின் அதாவது படிகத்தின் துகளை ஆராய்ச்சி சாலையில் வைத்து அவற்றின் மீது ஊட்டச்சத்து கலவையை இட்டபோது அதிலுள்ள நுண்ணுயிர்கள் புதுப்பிக்கப்பட்டு  வளர்ச்சியடைவது தெரிந்த்து.

இப்பாக்டீரியம் பூமியில் வாழ்க்கை எப்படி தொடங்கியது  கேள்விகளை மீண்டும் எழுப்பி சர்ச்சையை கிளப்பி இருக்கிறது !?


முழு விபரங்களுக்கு பின்வரும் இணைப்பை பார்க்கவும்:

Courtsy: http://news.bbc.co.uk/2/hi/sci/tech/978774.stm

Popular posts from this blog

சங்கிலி கருப்பன் Rattle snake